மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி தங்கம், வெள்ளி இறக்குமதிக்கும் ஜி.எஸ்.டி.,: மத்திய அரசு அறிவிப்பு..!

 
gold

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி., விலக்கை ரத் து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய இறக்குமதிக்கு இனி 3 சதவீத வரியை செலுத்தியாக வேண்டும்

மத்திய வருவாய் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா டில்லியில் கூறியதாவது: வங்கிகள் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஐ.ஜி.எஸ்.டி., விலக்கு சலுகை கடந்த மார்ச் 31 உடன் முடிவடைந்தது. இந்நிலையில், அதை அரசு மேலும் நீட்டிக்கவில்லை. இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியும் ஒரே மாதிரியான வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.வரி சலுகை காரணமாக குறிப்பிட்ட ஒரு இறக்குமதி வழிமுறை மட்டும் முன்னு ரிமை பெறுவதை தவிர்க்கவே, ஏப்., 1 முதல் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜி.எஸ். டி., கவுன்சில் கூட்டத்திலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.