மக்களுக்கு அடுத்த ஷாக்..! வண்டிகளுக்கான , 'பேன்சி' எண் கட்டணம் பல மடங்கு உயர்கிறது..!!

 
Q

'பேன்சி' எண் என கூறப்படும், சிறப்பு பதிவெண்ணை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு, பதிவு எண்களுக்கு, தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு, 80,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 13 மற்றும் 14வது வரிசைக்கான சிறப்பு எண்களை பெற, 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து, 2,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

அரசு உயர்த்த உள்ள கட்டணம், தற்போதுள்ளதை விட, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.