மக்களுக்கு அடுத்த ஷாக்..! புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை! .
Jul 11, 2026, 07:00 IST1783733441000
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நேற்று முட்டை விலை 650 காசுகளாக (ரூ.6.50) இருந்து வந்தது.
இதற்கிடையே நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 655 காசுகளாக (ரூ.6.55) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும் சில்லறை விற்பனையில் முட்டை விலை 8 ரூபாயை தொட்டுள்ளது.
மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

