மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஆந்திராவில் 421 பெட்ரோல் பங்க் மூடல்..!

 
1

ஆந்திராவில் இப்போது 421 பெட்ரோல் பம்ப்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இது நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு குறித்த கவலையை அதிகமாக்கி உள்ளது. 

ஆந்திராவில் பெட்ரோல் பம்ப்கள் அதிகளவில் மூடப்படுவதை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாக ஆய்வு செய்து வருகிறார். 

குறிப்பாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெட்ரோல், டீசல் தட்டுபாடு நிலவுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து மும்பைக்கு புறப்படும் முன்னர், தலைமை செயலாளர் சாய் பிரசாத் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.முதலமைச்சர் அலுவலகத்தின் தகவலின்படி, ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எரிபொருள் இருப்பு குறித்து விரிவாக அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். ஆந்திராவில் மொத்தம் 4,510 பெட்ரோல் பம்ப்கள் உள்ளன.

இப்போது பெட்ரோல், டீசல் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் காரணமாக, 421 பெட்ரோல் பம்ப்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதாவது, 9% அதிகமாக பெட்ரோல் பம்ப்கள் மூடப்பட்டிருக்கிறது.

எரிபொருள் விநியோகம் என்பது மற்ற காலகட்டங்களை விட 10 மடங்கள் அதிகரித்திருக்கிறது என்பும் ஆனால் பல்வேறு பெட்ரோல் பம்ப்களில், அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயல்பான காலகட்டத்தில், ஆந்திராவில் ஒரு நாளைக்கு பெட்ரோல் 6,330 கிலோலிட்டரும், டீசல் 9,048 கிலோலிட்டரும் விற்பனையாகும். நேற்று மட்டும் பெட்ரோல் 10,345 கிலோலிட்டர் மற்றும் டீசல் 14,156 கிலோலிட்டர் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, பெட்ரோலின் விற்பனை 63.43% அளவுக்கும், டீசலின் விற்பனை 56.45% அளவுக்கும் உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் தினந்தினம் 50% அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிப்பால்தான், பெட்ரோல் பம்ப்களில் வேகமாக இருப்பு காலியாகிறது.