மக்களுக்கு அடுத்த ஷாக்..!! தமிழ்நாட்டில் அரிசி விலை 'கிடுகிடு' உயர்வு: 25% முதல் 30% அதிகரிப்பு!
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் அரிசி விலை சுமார் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்வாக இருக்கக்கூடும். மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுவது சரியல்ல. தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இன்னும் 90 நாட்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் வந்துவிடும். எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
30 கிலோ பாசுமதி அரிசி ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,450 முதல் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.4,900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி நேற்று ரூ.5,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

