மக்களுக்கு அடுத்த ஷாக்..!! 12 நாட்களில் 5வது முறையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை..!!
கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
இதனால், நம் நாட்டில், இம்மாதம், 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு, 3.11 ரூபாய் உயர்த்தப்பட்டன.
பின், 19ம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 86 காசு அதிகரிக்கப்பட்டன.
மீண்டும், 23ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 87 காசு உயர்த்தப்பட்டன.அன்று, தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 105.31 ரூபாய்க்கும், லிட்டர் டீசல், 96.98 ரூபாய்க்கும் விற்பனையாகின.
நேற்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு, 2.46 ரூபாய், டீசல் லிட்டருக்கு, 2.58 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர், 107.77 ரூபாய்க்கு விற்பனையானது. லிட்டர் டீசல், 99.56 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

