மக்களுக்கு அடுத்த ஷாக்..!! தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது சுங்கக்கட்டணம்..!!
May 22, 2026, 09:41 IST1779423113794
இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 66 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒன்றரை மாதத்திற்குள் மீண்டும் ஒரு கட்டண உயர்வு என்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

