இந்தியர்களுக்கு அடுத்த ஷாக்..! H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்..!

 
1

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் H-1B விசா கட்டணத்தை உயர்த்தி இருந்தார். அதாவது ஹெச்-1பி விசா கட்டணம் 4,500 டாலரில் (ரூ.3.7 லட்சம்) இருந்து 100,000 டாலராக உயர்த்தப்பட்டது. இது 2,122% உயர்வாகும். இந்த அறிவிப்பு வெளியாகி சில நாட்களில் இப்போது அமெரிக்காவில் H-1B விசா திட்டத்தின் விதிமுறைகளை மாற்றியமைக்க ஒரு புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தில் லாட்டரி முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 85,000 ஹெச்-1பி விசா வழங்கப்படும். ஆனால், இந்த எண்ணிக்கை தாண்டி அதிகப் பேர் விசா கோரி விண்ணப்பிப்பார்கள். அதுபோன்ற சூழல்களில் கம்பியூட்டர் அடிப்படையிலான லாட்டரி முறையில் விசா வழங்கப்படும். இந்த லாட்டரி முறையை டிரம்ப் கடுமையாக எதிர்த்து வந்தார்.

இந்தச் சூழலில் தான் நேற்று டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, H-1B விசா தேர்வு செயல்முறையில் பெரும் மாற்றம் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பில் ஹெச்1பி விசா அளிக்கப்படும் விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய லாட்டரி முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை விநியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ள H-1B திட்டத்தின் மிக முக்கியமான சீர்திருத்தமாகக் பார்க்கப்படுகிறது.

 

செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பில் ஹெச்1பி விசா அளிக்கப்படும் விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய லாட்டரி முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை விநியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ள H-1B திட்டத்தின் மிக முக்கியமான சீர்திருத்தமாகக் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் பேசுகையில், "அமெரிக்க ஊழியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் போகிறோம் எனத் தேர்தல் சமயத்தில் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெச்-1பி விசா விதிமுறைகளைச் சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி வந்த நிலையில், அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உயர்திறன் கொண்ட ஊழியர்களை அமெரிக்காவிற்குக் கொண்டு வர விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் நிம்மதியையே கொடுக்கும். ஏனென்றால் சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தின. இதனால் உண்மையாகவே திறமையான ஊழியர்களைக் கொண்டு வர முயலும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதை இப்போது நாங்கள் சரி செய்துள்ளோம். அமெரிக்க ஊழியர்களுக்கு அதிகளவில் வேலை கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்" என்றார்.