I.N.D.I.A. கூட்டணி கட்சியின் அடுத்த கூட்டம் ஆக. 8ஆம் தேதி நடைபெறும்- மல்லிகார்ஜூன கார்கே
I.N.D.I.A. கூட்டணி கட்சியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள Constitution Club of India-வில் இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.ஐ.ஆர் வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் திருட்டு தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்ப கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் I.N.D.I.A. கூட்டணி கட்சியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் விவாதிப்போம் என்றும், 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா கூட்டணி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அரசின் தவறான கொள்கைகளை இண்டியா கூட்டணி கூடுதல் வலுவுடன் எதிர்க்க வேண்டும் என்றும் கார்கே கேட்டுக்கொண்டார்.

