கமலின் ‘தக் லைஃப்’ படத்தின் அப்டேட் - படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
tn

‘ThugLife’ திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

tn
'நாயகன்' படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். இயக்குனர் மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். திரிஷா, அபிராமி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

tn

 இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.  இப்படத்தில் கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.  ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது. அத்துடன் சிம்பு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'THUG LIFE' திரைப்படத்தின் அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.  இதனால் கமல் ஹாசன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.