நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு
நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ள நீட் நுழைவு தேர்வில் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான 2026 -2027 கல்வி ஆண்டுக்கான 2 லட்சம் இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் 552 நகரங்களில் நடைபெறுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு எழுத நாடு முழுவதும் 22.79 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1 லட்சம் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் 30 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை
ஆவடி, திருவள்ளுர் நகர் பகுதி என 8 தேர்வு மையங்களில் 3240 பேர் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வர்கள் காலை 11 மணியிலிருந்து முழு சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

