டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது - வைரமுத்து

 
vairamuthu

டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது

இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்


பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது

கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய்சிவக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.