சந்திரகிரகணத்துக்கு பின் சிவப்பாக மாறிய நிலா

 
ச்

கொடைக்கானலில் சந்திர கிரகணம் நிகழ்வைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலா பொதுமக்கள் தொலைநோக்கிகள் மூலம் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

பூமியை நிலவு சுற்றிவரும் போது சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்டபிறகு அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில்  சந்திர கிரகணம்  மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்பட்டது ... பூமி சூரியனின் ஒளியை ஓரளவு மட்டுமே தடுக்கிறது, இதனால் சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் அல்லாமல் சாம்பல் அல்லது தங்க நிறத்தில் தோன்றும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சிவப்பு நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் நிலா தென்பட்டது.

இதனை தொலைநோக்கி மூலமாகவும்,  வெறும் கண்களிலும் கொடைக்கானல் வான இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்... அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இந்நிலையில் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் தொலைநோக்கிகள் மூலம் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிலாவின் பல்வேறு பரிமாணங்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.