நாளை மறுநாள் தொடங்கும் புரட்டாசி மாதம்.. மீன் வாங்க குவிந்த மக்கள்..

 
kasimedu - மீன்கள்

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சென்னை காசிமேடு மற்றும் கடலூர் மீன்பிடி துறைமுகங்களில் ஏராளமான மக்கள் மீன்களை வாங்க குவிந்தனர்.  

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கென தனி சிறப்புகள் உண்டு. இது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொள்வர்.  இந்த நிலையில் நடப்பாண்டு  புரட்டாசி மாதம் நாளை மறுநாள்( செப்.17) தொடங்குகிறது. பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்துகிடப்பர். அத்துடன் புரட்டாசி மாதமும் தொடங்க உள்ளதால் இன்று, சென்னை காசிமேடு மற்றும்  கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். அடுத்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட முடியாது என்பதால்,  பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். 

நாளை மறுநாள் தொடங்கும் புரட்டாசி மாதம்.. மீன் வாங்க குவிந்த மக்கள்.. 

பொதுமக்கள் அதிகளவில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. அத்துடன் வஞ்சிரம், வவ்வால், பால் சுறா,  திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.  வஞ்சரம் கிலோ 1000 ரூபாய், சங்கரா கிலோ 400 ரூபாய், கொடுவா கிலோ 650 ரூபாய், இறால் கிலோ 300 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்கிற அளவில் இன்று மீன்கள் விற்பனையானது. ஏராளமான  பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.