பணம் வந்துருக்கு.. போலீசிடம் சிக்காம கொடுக்கணும்! ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பேசும் வீடியோ..!
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 223-வது தொகுதியாக இருப்பது ஆலங்குளம். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில், வீரகேரளம்புதூர், தென்காசி தாலுகாக்களும், ஆலங்குளம், கீழப்பாவூர், ஆழ்வார்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடல் ஆகிய நகர பஞ்சாயத்துகளும் கடையம், ஆலங்குளம், கீழப்பாவூர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி யூனியன் ஆகிய யூனியன்களும். அமைந்துள்ளன.
இந்த தொகுதியில் தான் சுப்பிரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த கடையத்தில் பழமையான கல்யாணியம்மன் கோவில் உள்ளது. கீழப்பாவூர் நரசிம்மர் கோவில், சிவசைலம் கோவில், நல்லூர் தூய பவுல் ஆலயம், பொட்டல்பூர் தர்கா உள்ளிட்ட புகழ் பெற்ற ஆன்மீக தளங்களும் உள்ளன. இதன் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., க.கா.தே.கா., உள்ளிட்ட கட்சிகள் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் கே ஆர் பி பிரபாகரன் களம் இறங்கியுள்ளார்.திமுக சார்பில் மனோஜ் பாண்டியனுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.திமுக, அதிமுக இரு தரப்பிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தலைமையிடம் இருந்து பணம் வந்துள்ளதாக பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.. அதனால நமக்கு யாருலாம் ஓட்டு போடுவாங்க என்று தெரியுமோ அவங்களுக்கு எல்லாத்துக்கும் பணத்த கொடுங்க.. போலீஸ் பறித்துவிட்டார்கள் என்று எல்லாம் சொல்லக்கூடாது, சரியா பணத்த கொடுத்துவிடுங்கள்" என அவர் பேசும் வீடியோ பரவி வருகிறது.
#WATCH | "தலைமையில் இருந்து பணம் வந்துள்ளது. போலீசிடம் சிக்காமல் மக்களுக்கு கொடுங்கள்.."
— Sun News (@sunnewstamil) April 20, 2026
ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பு#SunNews | #Alangulam | #ADMK pic.twitter.com/5qRKlrjlEn
#WATCH | "தலைமையில் இருந்து பணம் வந்துள்ளது. போலீசிடம் சிக்காமல் மக்களுக்கு கொடுங்கள்.."
— Sun News (@sunnewstamil) April 20, 2026
ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பு#SunNews | #Alangulam | #ADMK pic.twitter.com/5qRKlrjlEn


