பாரதிராஜாவை புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்கு தீ மூட்டுவதா?" - வைரமுத்து கண்ணீர் பதிவு!
கே.பாக்யராஜ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பதினேழே நாட்களில் இன்னோர் இடியா?. பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா?. என்ன கொடுமை இது!. பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர்.
அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்து விடுவார்.
80களில் தமிழ் சினிமாவை நோக்கிவந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை கொடுத்தவர்
பாக்யராஜ் . எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார். பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிரவைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ!. பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினேழே நாட்களில்
— வைரமுத்து (@Vairamuthu) June 27, 2026
இன்னோர் இடியா?
பாரதிராஜாவைப் புதைத்த
மண்ணின் ஈரம்
இன்னும் காயவில்லை;
அதற்குள் பாக்யராஜுக்குத்
தீ மூட்டுவதா?
என்ன கொடுமை இது!
பாக்யராஜ்
ஈடு இணையற்ற கலைஞன்
அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத்
திரைக்கதையில் இட்டு
அதைத் தான்மட்டுமே
அவிழ்க்கத் தெரிந்தவர்
அவர் உருவம்… pic.twitter.com/eAIh1n20s1

