அரைகுறை ஆடை... பெண்களை அருகில் ஆடச்சொல்லி ரசித்த அமைச்சர்

 
ச் ச்

சிவகங்கையில் நடைபெற்ற உதயநிதி பிறந்த நாள் விழா மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளம்பெண்களை, தனது அருகில் ஆடச்சொல்லி கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ரசித்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “இதுதான் பெண்களை மரியாதையாக நடத்தும் அரசா? விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதையே புறக்கணித்து தமிழுக்கு அவமரியாதை செய்த முதல்வர் அவர்களே, இன்று  வாரிசு அரசியல் வழி வந்த உங்கள் புதல்வன் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவில்  அமைச்சர் பெரியகருப்பனின் செயலால் திமுக அரசு தரம் எவ்வளவு தாழ்ந்திருக்கிறது என்பதற்கு சாட்சி. சிவகங்கையில் நடந்த விழாவில் அமைச்சர் அருகில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனமாட அதை இரசித்துக் கொண்டிருக்கிறார். 


ஏற்கனவே ஓசி பஸ், பவுடர் வாங்குனிங்களா என்று தொடர்ந்து கீழ்த்தரமாக பேசி வரும்  வேளையில் உச்சகட்டமாக உல்லாச விடுதியில் ஆடுவது போல் பெண்களை ஆட வைத்து இரசிக்கின்றனர். இதுதான் உங்கள் பெண்ணுரிமையா? சமூக நீதியா? வருகிற 2026-ல் பெண்கள் இதெற்கெல்லாம் முடிவு கட்டுவார்கள்.  பீகாரில் பெண்கள் வாக்குகளே வெற்றிக்கு முக்கியமாக எதிரொலித்தது போல் தமிழகத்திலும் கண்டிப்பாக மாற்றம் நடக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.