அரசு பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்

 
tn

நாகர்கோவில் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரத்தில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

rn

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 36 எம் என்ற பேருந்து நடுசாலையில் பழுதாகி நின்றது. இதையடுத்து பேருந்தினை கல்லூரி மாணவிகள் இறங்கி தள்ளினர். சீக்கிரம் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் சாலையில் இறங்கி மாணவிகள் ஒட்டுமொத்தமாக பேருந்தை  தள்ளினர்.  இது குறித்த காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. 

suspend

இந்நிலையில் கல்லூரி மாணவிகளை பேருந்து தள்ள வைத்த ஓட்டுனர் பாபு , எலக்ட்ரீசியன் வைகுண்ட கிருஷ்ணன்,  சூப்பர்வைசர் சுப்ரமணியன் பிள்ளை, நடத்துனர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நாகர்கோவில் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் நான்கு பேரையும் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.