வேலைக்குவந்த 17 வயது சிறுமியை சீரழித்த மேனேஜர்

 
rape

வெப்படையில் 17வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆலை மேற்பார்வையாளர் மோகன்ராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

81,531 BEST Rape IMAGES, STOCK PHOTOS & VECTORS | Adobe Stock

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர்  வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆலையில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின்பேரில் வெப்படை போலீசார் நடத்தியதில் ஆலையின் மேற்பார்வையாளர் மோகன்ராஜ், 17வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.