மனைவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த நண்பரை கொலை செய்து ஆற்றில் வீசிய நபர்

 
murder

குமாரபாளையத்தில் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசிய நண்பரை நீரில் மூழ்கி கொலைசெய்து காவிரி ஆற்றில் வீசிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Can't police prevent a murder?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதிக்குட்பட்ட தம்மண்ண செட்டியார் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற தினேஷ்வரன். இவர் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை மட்டும் குமாரபாளையம் வந்து நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை ஒட்டி குமாரபாளையம் வந்த தினேஷ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டு அருகில் இருந்த அவரது நண்பர் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் வரவில்லை இரண்டு நாட்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தினேஷ்வரன் காணவில்லை என புகார் அளித்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் மீது சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது வீட்டில் தகராறு செய்துள்ளனர். இதனால் வெங்கடேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது தனது மனைவி நிர்மலாவை தினேஷ்வரன் பாலியல் தொல்லை கொடுத்ததால் வீட்டிலிருந்து குடிநீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் பின்னர் தினேஷ்வரன் சடலத்தை மூட்டை கட்டி நள்ளிரவில் தனது தம்பி கிருஷ்ணராஜ் உதவிஉடன் கொண்டு சென்று காவிரியாற்றில் வீசியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் வெங்கடேஸ் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்தததையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் தீவிர விசாரணை செய்த பின்னர், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.