தவெகவில் இணைந்த நாதக முக்கிய புள்ளி
நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த க.ராமசுப்பிரமணி அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளர் க. ராமசுப்பிரமணி உள்ளிட்ட 27 பேர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை நேரில் சந்தித்த அவர்கள், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இதில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தொழிற்சங்கப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெ. பாலமுருகன், மாவட்டத் தலைவர் ச. சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் அ. பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டைகளை வழங்கி வரவேற்றார்.
மேலும், மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்தவர்களைப் புதியவர்களாகக் கருதாமல், தமிழக வெற்றிக் கழகக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மதிப்போம் என்றும், அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதியளித்துள்ளார்.இதற்கிடையே, மேலும் பல நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக, புதிதாக இணைந்தவர்கள் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 27 பேர் தவெகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது

