ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மாணவரின் கால் துண்டானது!

 
train

சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மருத்துவக் கல்லூரி மாணவரின் கால் துண்டானது. 

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து வந்த மாணவன் கால் துண்டிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசெல்வகுமார்(25). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மாலை இவர் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலுக்காக டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் தவறுதலாக விழுப்புரம் நோக்கி செல்லும் ரயிலில் ஏறி உள்ளார்.

ரயில் புறப்பட்ட பிறகு ரயில் மாறி ஏறி இருக்கிறோம் என்பதை உணர்ந்த பாலசெல்வகுமார், உடனடியாக ஓடும் ரயிலில் இருந்து குதித்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென கால் இடறி கீழே விழுந்தார். இதில் ரயில் சக்கரம் ஏறி அவரின் கால் துண்டானது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் ரயில்வே போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்த விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.