கடைசி 5 நாள்! பள்ளி மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற உடனே விண்ணப்பீங்க..!

 
1 1

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கவும் மத்திய அரசு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தை (NMMS) செயல்படுத்தி வருகிறது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் 6,695 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 

உதவித்தொகை விவரம்:

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு (பிளஸ் 2) வரை தங்களது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு மொத்தம் ரூ.12,000 கல்வி உதவித்தொகையாக நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான (www dge tn gov in) என்ற முகவரியில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து, தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி கடைசி நாளாகும்.

நடப்பு ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.