"தி கேரளா ஸ்டோரி"- கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்காட்சியை பார்த்தார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள பிரிவியூ திரையரங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை தனது மனைவியுடன் பார்த்து ரசித்தார் #TheKerelaStory @rajbhavan_tn @reportersridhar pic.twitter.com/eJm0OvTJGi
— M.VIGNESHMUTHU. (@VICKEYMVM) May 21, 2023
இந்நிலையில் இந்தியில் வெளியாகியிருந்த "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் உள்ள பிரிவியூ திரையரங்கில் கண்டு ரசித்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Watched “The Kerala Story”.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 21, 2023
Thanks for exposing a thinly veiled horrific reality.: Governor Ravi@PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @ANI @PTI_News
Watched “The Kerala Story”.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 21, 2023
Thanks for exposing a thinly veiled horrific reality.: Governor Ravi@PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @ANI @PTI_News