பெண் தவறாக நடந்த பிசியோதெரபி மருத்துவர் - அடி வெளுத்து வாங்கிய உறவினர்கள்!!

 
tn

பிசியோதெரபி சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

tn

விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று மாலை 21 வயது பெண் ஒருவர் பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.  அங்கு பணியில் இருந்த பிசியோதெரபி உதவி மருத்துவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.  இது குறித்து அந்த பெண் உறவினர்களிடம் தகவல் தெரிவித்த நிலையில் , பெண்ணின் உறவினர்கள் உதவி மருத்துவரை கடுமையாக தாக்கினர். 

arrest

இதில் படுகாயமடைந்த உதவி மருத்துவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இதுகுறித்து பெண் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.