பகீர் சம்பவம்..! தங்கைக்காக மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்த அண்ணி..!
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், பர்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பொறியாளரான அவர், ஹல்துவானியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.தீபாவளி விடுமுறைக்காக அவர் தமது வீட்டிற்குச் சென்றிருந்தார்.அவருடைய மூத்த சகோதரர் ராஜ் பகதூர், அர்ச்சனா என்ற பெண்ணை மணமுடித்துள்ளார்.
இந்நிலையில், உமேஷ் தனது அண்ணி தங்கையுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால்
அர்ச்சனா தன் தங்கையைத் தன் மைத்துனர் யோகேஷுக்கு மணமுடித்து வைக்க முடிவு செய்தார். ஆனால், யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, வரும் நவம்பர் மாதம் அவர்களது திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா, தனது சகோதரிக்காக பழிவாங்கும் நோக்கில், மைத்துனர் உமேஷின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 20) தீபாவளி வழிபாடு செய்வதற்காகத் தம் அறைக்கு வரும்படி மைத்துனர் யோகேஷை அவர் அழைத்தார். அறைக்குள் யோகேஷ் வந்ததும் கூரிய ஆயுதத்தால் அவரது பிறப்புறுப்பை அர்ச்சனா வெட்டியதாகக் கூறப்படுகிறது.
யோகேஷின் அலறல் கேட்டு ஓடிவந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது உடலிலிருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறை ராஜ் பகதூரிடமும் அர்ச்சனாவிடமும் விசாரணை நடத்தியது.பலத்த காயமடைந்த உமேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


