“மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே”- நான் முதல்வன் திட்ட பெயர் மாற்றத்திற்கு வந்த சோதனை

 
அ

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் 'திறன் தமிழ்நாடு'  என பெயர்  மாற்றப்பட்டுள்ளது. 

Image

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கிவந்த நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் 'திறன் தமிழ்நாடு' (TNSKILL CORPORATION) என பெயர்  மாற்றப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டன.
 
இந்நிலையில் UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு  'திறன் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்த நிலையில், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை கவனிக்க தவறியுள்ளது.