இல்லத்தரசிகள் ஷாக்..!! தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!!

 
Gold

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை இன்னும் குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்துக்கும் கீழே சரியும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது விலை உயர்வு.

பொதுவாக அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அந்நாட்டின் பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருந்தபோது, முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருகிற பிற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வந்தனர். அதனால் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது.

ஆனால், தற்போது அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு அறிக்கையானது தங்கம் விலை ஏற்றத்திற்கு வழிவகுத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அங்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கம் விலை

கடைசி 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,240 உயர்ந்திருக்கிறது.

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 12) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.