அரசின் நிதி அரைகுறையாக உள்ளது... ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி..?
செலவுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, செலவை குறைத்திருப்பதாக சொல்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம் பெண்கள் வருவார்கள். இன்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரமாக உள்ளது. உங்கள் அதிர்ஷ்டம் தங்கம் ஒரு லட்சத்திற்கு வரட்டும். புடவை ரூ.10,000-க்கு வரட்டும்; ஒரு லட்சத்து 10 ஆயிரத்த்தை ஒரு லட்சமாக மாற்றினால் கூட அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் வேண்டும் என்று சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட தங்களது திட்டங்கள் குறித்தும் பேசினார். மேலும், திட்டங்கள் பற்றி தெரியாத சிறு பிள்ளைகள் ஓட்டு போடும் நேரத்தில் குறுக்கே வந்து விஜய்க்கு ஓட்டு போட செய்து விட்டார்கள் என்றும் விமர்சித்தார்.
எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம் மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை நீங்கள் எடுத்துவிட்டீர்கள். பரவாயில்லை, எங்களால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடியல் கிடைக்கும். அந்த விடியல் பயணத்தில் அவர் இருக்கிறார் என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், மகளிர் உரிமை தொகை பற்றி கேட்டால் உங்கள் தலைவர் பெயர் தான் வரும் என்று சொல்கிறீர்கள். ஒன்றை மறந்துவிட்டீர்கள்.. தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கடன் விட்டுவிட்டு சென்றதும் நீங்கள் தான். அங்கு டான் அவரை தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை யாரிடம் விட்டுவிட்டு சென்றீர்கள் என்று விமர்சித்தார்.
#JUSTNOW || மகளிர் பயண திட்டத்தில் விடியலை எடுத்தது பரவாயில்லை.. அண்ணன் சீர் திட்டத்தை ரூ.832 கோடியில் நிறைவேற்ற முடியாது - திமுக எம்.எல்.ஏ ரகுபதி
— Polimer News (@polimernews) August 7, 2026
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ரூ.1.28 லட்சம் கடனை விட்டுச் சென்றது திமுக.. திமுக அரசின் நிர்வாக தோல்வி தான் தனிநபர்… pic.twitter.com/9nozwbMSE0

