மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தவெக அரசு..! அரசு பள்ளியில் CM ஸ்பீச் ஒளிபரப்பு..!
.கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்று பேசினார். அவரது உரையானது, கரூரில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.அரசு பள்ளியில் மாணவர்கள் முதல்வர் உரையை தொலைக்காட்சியில் பார்க்கும் வீடியோக்களும் வெளியாகின. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

