தியாகிகளுக்கு வீரவணக்கம்: ஜனவரி 30-ல் நாடு முழுவதும் 2 நிமிடம் மவுனம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவு..!

 
1 1

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, தங்கள் உயிர்களை தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், ஜன., 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு, நாடு முழுதும் இரண்டு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நேரத்தில், எல்லா பணிகளையும் நிறுத்த வேண்டும்.

சாத்தியமான இடங்களில், மவுனம் கடைப்பிடிப்பது மற்றும் முடிப்பது குறித்து, சைரன் மற்றும் ராணுவ துப்பாக்கி வாயிலாக ஒலி எழுப்பி அறிவிக்க வேண்டும். சைரன்கள் காலை, 10:59 மணி முதல், 11:00 மணி வரை ஒலிக்க வேண்டும். இரண்டு நிமிடம் முடிந்த பின், 11:02 முதல், 11:03 மணி வரை, நிகழ்ச்சி நிறைவு பெற்றதை சைரன் ஒலி எழுப்பி தெரிவிக்க வேண்டும். எல்லோரும் எழுந்து நின்று மவுனம் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில், பொது மக்கள் புனிதத் தன்மையை உணராமல், வழக்கமான பணிகளில் ஈடுபட்டதை கவனிக்க முடிந்தது. எனவே, தியாகிகள் தினம் உரிய மரியாதையுடன், புனிதத் தன்மையுடன் கடைப்பிடிக்கப்படுவதை, மாநில அரகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இது குறித்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, உரிய அறிவிப்பு வெளியிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.