குறைந்த விலையில் ஃபேஸ் வாஷ்... மத்திய அரசு அறிமுகம்

 
s

முகப்பரு, எண்ணெய் சருமத்திற்காக புதிய ஃபேஸ் வாஷை  ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. 


பிரதமர் பாரதிய ஜன் ஒளஷதி பரியோஜனா திட்டத்தின் சாலிசிலிக் அமில ஃபேஸ் வாஷ் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெரு நிறுவனங்களின் விலையுயர்ந்த பொருட்களுக்கு மாற்றாக, முகப்பரு, எண்ணெய் சருமத்திற்காக Salicylic Acid ஃபேஸ் வாஷை மிகக் குறைந்த விலையில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. PMBJP திட்டத்தின் கீழ், வெறும் ரூ.46.88க்கு Jan Aushadhi இணையதளம் மற்றும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. குறைந்த விலை மற்றும் முகப்பரு பராமரிப்பு பயன்பாடுகளால் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகப்பரு மற்றும் பருக்கள் உருவாகுவதை குறைக்க உதவும் தயாரிப்பாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களில் இந்த ஃபேஸ் வாஷ் விற்பனை செய்யப்படுகிறது.