பார்வையற்றவரை நடுவழியில் இறக்கிவிட்டு அரசு பேருந்து நடத்துனர்

 
தென்காசி

கண் பார்வையற்ற நபரை பாதியிலேயே இறக்கி விட்ட அரசு பேருந்து நடத்துனர் மீது போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதி சேர்ந்தவர் கந்தசாமிசுப்பையா, இவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. இந்த நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் அரிசி, சீனி வாங்கி சென்று உள்ளார். அப்பொழுது அந்தப் பகுதியாக தன் TN 72 N1522 என்ற பதிவு எண் கொண்ட பாவூர்சத்திரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் அவர் ஏறி உள்ளார். அப்பொழுது 5 கிலோ அரிசி பை வைத்திருந்ததாக அவரிடம் அரசு பேருந்து நடத்துனர் லக்கேஜ் கேட்டுள்ளார். அதற்கு கண் தெரியாத கந்தசாமி சுப்பையா வெறும் ஐந்து கிலோ பை தானே வைத்துள்ளேன், இதற்கு எதற்காக லக்கேஜ் என்று கேட்கிறீர்கள் எனக் கூறியுள்ளார்.


அதற்கு அரசு பேருந்து  நடத்துனர் கண்ணு தெரியவில்லை என்றாலும் அரிசி,சீனி வாங்கி விட்டு வருகிறாய் அல்லவா லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து லக்கேஜ்க்கு டிக்கெட் எடுக்காத கந்தசாமி சுப்பையா என்பவரை  திருமலைபுரம் முதல் முதலியார்பட்டி செல்லும் சாலை பகுதியில் பாதியிலேயே இறக்கி விட்டு சென்றுள்ளார் நடத்துனர். இதனைத் தொடர்ந்து இரண்டு கண்களும் பார்வையற்ற கந்தசாமி சுப்பையா மிகவும் சிரமபட்டு அப்பகுதியை கடந்து சென்றுள்ளார். எனவே மனிதாபிமா னமற்ற  செயலில்  ஈடுபட்ட  அரசு பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை போக்குவரத்து துறை எடுக்குமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.