சிறுமியின் உடல் இன்று காலை நல்லடக்கம்

 
tn

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில்  9 வயது சிறுமி  கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த கால்வாயில் சிறுமியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

tn

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர்  மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

tn

இந்நிலையில் புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் இன்று காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. சோலை நகரில் உள்ள இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், கடலோரப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.