காதலனுடன் தனிமையில் இருந்த சிறுமி- வீடியோ எடுத்து மிரட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது

 
ஆபாச படம்

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பழனியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றுள்ளார். இதனை பார்த்த  பழனியை சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துள்ளார். சிறுமியை தொடர்பு கொண்டு ஆண் நண்பருடன் சென்றதை வீட்டில் பெற்றோரிடம் கூறி பிரச்சனை ஏற்படுத்துவதாக மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமியை அழைத்து தன்னுடன் வெளியே வர வேண்டும், தனது ஆசைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். முஜீப் ரகுமான் பேசியதை   செல்போனில் பதிவு செய்த சிறுமி பழனி காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். 

போலீஸார் முஜீப் ரகுமானை  விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து குழந்தைகள் நல காப்பக  அதிகாரிகளிடம் சிறுமி நடந்ததை  கூறியுள்ளார். பின்னர் குழந்தைகள் நல  அலுவலக அதிகாரிகள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து அந்த இளைஞர் முஜீப் ரகுமான் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.