மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் மனம் கவர்ந்த சிறுமி
தனது தாயாரின் உருவப்படத்தை வரைந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தபோது தொலைவில் ஒரு சிறுமி பிரதமர் மோடியின் தாயாரின் புகைப்படத்தை கையில் வைத்திருப்பதை பார்த்த பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு அந்த சிறுமியின் பெயர் மற்றும் முகவரியை பெற்றுக் கொண்டு அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். அந்த சிறுமிக்கு நான் வாழ்த்து கடிதத்தை எழுத விருப்பப்படுகிறேன் எனக் கூறினார். இதனை அடுத்து அங்கிருந்த கூட்டம் கரகோஷத்தை எழுப்பியது.
மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் தாயார் புகைப்படத்தை சிறுமி ஒருவர் கையில் வைத்திருந்ததை பார்த்து பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையில் கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் சிறுவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை வரைந்து அதை கையில் வைத்திருந்த போதும் இதே போல உணர்ச்சி வசப்பட்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூர் சென்று இருந்த போதும் சிறுமி ஒருவர் இதே போல புகைப்படத்தை காட்டிய போது உணர்ச்சிவசப்பட்டு இருந்தார்

