10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி பலி

 
ரூ.10க்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி பலி?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையில் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலெட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் காவியா என்ற பெண் உள்ளார். மாளவிகா இன்று மதியம் அருகில் உள்ள கடையில் ரூ.10-க்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். DAILEE என்ற குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே காவியா வாயில் நுரைத்தள்ளியது.

உடனே காவியாவை அவரது பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி காவியா உயிரிழந்தார். உடற்கூராய்வுக்கு பின்னரே குளிர்பானத்தால் சிறுமி உயிரிழந்தாரா என்பது தெரியவரும். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தனது குழந்தை மரணத்திற்கு மலிவு விலை குளிர்பானமே காரணம் என காவியாவின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.