மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்..1

 
1

புரட்சித் தலைவருக்கு பிறகு மீனவர்களின் நண்பனாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் விஜய் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கால்நடை, மீன்வளத்துறைக்கு ரூ.4880 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:

  • பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
  • உயர்கல்வித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.8,393 கோடி ஒதுக்கீடு
  • தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.2,022 கோடி ஒதுக்கீடு
  • சிறப்பு திட்டம் செயலாக்கத்திற்கு 2026-27 நிதியாண்டில் ரூ.17,150 கோடி ஒதுக்கீடு
  • இளைஞர் நலன் & விளையாட்டு துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,051 கோடி ஒதுக்கீடு
  • சமூக நீதித்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.3,937 கோடி ஒதுக்கீடு
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,700 கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.1,485 கோடி ஒதுக்கீடு
  • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.9,718 கோடி ஒதுக்கீடு
  • மருத்துவத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.23,357 கோடி ஒதுக்கீடு
  • கூட்டுறவுத்துறை மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.8,028 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.14,984 கோடி ஒதுக்கீடு
  • கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மேம்பாட்டிற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.4,780 கோடி ஒதுக்கீடு