திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு - பெரிய சூரியூரில் உற்சாகமாக தொடங்கியது!!

 
ttn

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு உடனே வருவது ஜல்லிக்கட்டு தான். நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், இன்று உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 

jalli

இந்நிலையில் திருச்சி, பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தொடங்கி வைத்தார்.முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 350 மாடுகள், 300 காளையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

jalli

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் யாருக்கேனும் முதலுதவி தேவைப்படும் பட்சத்தில்,  மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளன.