விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

 
Q

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கடந்த 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு இரண்டு கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் அலுவல் கூட்டங்கள் மற்றும் ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் உட்பட தவெகவைச் சேர்ந்தவர்கள் 31 பேர், காங்கிரசை சேர்ந்த இருவர், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 35 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது;

இக்கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டம், ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் மற்றும் புதிய முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுவது, பட்ஜெட் கூட்டத்தொடர், டாஸ்மாக் விவகாரம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.