அதிர்ச்சியில் படக்குழு..!! விஜயின் ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையதளத்தில் லீக்..!!

 
Q

விஜய் நடிப்பில், ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியீடு தள்ளிப்போனது..

யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நேற்று படத்தின் ஐந்து நிமிட காட்சிகள் முதலில் லீக்காகியிருந்தன. அதில் விஜய்யின் இன்ட்ரோ சீன் உள்ளிட்டவைகள் எல்லாம் இருந்தன. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் முழு படமுமே லீக்காகிவிட்டது. அதை பார்த்து மேற்கொண்டு உறைந்து போனார்கள் ரசிகர்கள். தங்கள் தளபதியின் கடைசி படத்துக்கு இப்படி தொடர்ந்து சிக்கல் கொடுக்கிறார்களே என்று நொந்துகொண்டார்கள்.

இந்நிலையில் புதிய தகவல்களும் இணையத்தில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது இணையத்தில் வெளியான ப்ரிண்ட்டில் எடிட் மார்க்கும் இருக்கிறது. அந்த எடிட் மார்க் இருக்கும் வெர்ஷன் இயக்குநர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர் ஆகியோரிடம்தான் இருக்கும். அப்படி பார்க்கையில் இந்த நான்கு பேரின் தரப்பிலிருந்துதான் படம் லீக்காகியிருக்கும் என குரல்கள் கேட்கின்றன.