தூங்கிக் கொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்து பலி

 
death

பெரியபாளையம் அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

snake bite

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(45). இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மல்லிச்செடி பயிரிட்டு  மல்லிகைப் பூக்களை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 26ஆம் தேதி இரவு தனது வீட்டின் வெளிப்புறத்தில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று முருகனை கடித்துள்ளது. பாம்பு தீண்டியதும் ஏற்பட்ட வலியில் முருகனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.