முதலமைச்சருக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர் நன்றி

 
tn

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அத்துடன் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், திரு.இம்மானுவேல் சேகரனாரின் மகள் திருமதி.சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் திரு.சக்கரவர்த்தி ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

tn

இதன் காரணமாக  இம்மானுவேல் சேகரனார் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அவருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

stalin

இந்நிலையில் பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தியாகி இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். எனது தந்தை இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.திமுக ஆட்சிக்கு தங்களது சமுதாய மக்கள் எப்பொழுதும் விசுவாசமாக இருப்பார்கள் என்று இம்மானுவேல் சேகரன் மகள் பிரபாராணி தெரிவித்துள்ளார்.