உரிமைத்தொகை ₹1,000 அல்ல.. இனி ₹2,500! - தவெக ஆட்சியில் பெண்களுக்குக் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்..!

 
1

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

  • பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான தனி இலாகா அமைக்கப்படும். அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • மகளிர் உரிமைத் தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நம்முடைய அரசில் 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதாமாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும்.
  • அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
  • பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும்.
  • 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • காமராஜர் கல்வி உறுதித் திட்டம் - மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
  • வெற்றி பயணம் திட்டமாக அனைத்து அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  • சுய உதவி குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
  • தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும்.
  • அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் - பெண்களுக்கு Import குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம்.
  • ரேஷன் கடைகளில் பள்ளிகளில் இலவச நாப்கின்கள் திட்டம்.