சாலையோரமா கொட்டிக்கிடந்த தங்க காசு..! ஊரே திரண்டு வந்ததால் பரபரப்பு
Jun 15, 2026, 22:05 IST1781541327399
ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசு கிடப்பதாக பரவிய தகவலால் ஊரே சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் சென்று சொல்லியுள்ளனர். இதுபோன்று பரவிய தகவலால் ஊரே சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரண்டு வந்த மக்களால் கண்டெடுக்கப்பட்டவை செம்பு காசுகள் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காசுகளை வீசிச் சென்றவர்கள் யார்? எனவும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மக்களால் கண்டுக்கப்பட்ட காசில் 63% செம்பு,36% ஸிங்க் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

