கே.என். நேரு சகோதரரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
திமுகவின் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நிறுவனத்தில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் தில்லைநகரில் உள்ள கே.என். நேருவின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தில்லை நகர் பத்தாவது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனைகள் ஈடுபட்டனர். இதேபோல் கே.என்.நேருவின் உறவினர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் 10 மணிநேரம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர். அவரிடம் தனியாக விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.