சைதாப்பேட்டை, கே.கே.நகர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!
Nov 19, 2025, 09:30 IST1763524809924
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீட்டிலும், அம்பத்தூர் திருவேங்கடா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் சோதனையின் முடிவிலே முழு விவரம் தெரியவரும். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

