அரியலூரில் காசி விஸ்வநாதர் கோயில் மரகதலிங்கம் திருட்டு

 
ச் ச்

ஜெயங்கொண்டம் அருகே பழமையான சிவன் கோவிலில் பல கோடி மதிப்பிலான மரகதலிங்கம் திருடுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலையூர் சிவன் கோயிலில் மரகதலிங்கம் திருட்டு!


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆலயத்தில் உள்ள மரகத லிங்கம் திருட்டு.நேற்று இரவு பிரதோஷம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் பூசாரி கலியபெருமாள் கோவிலின் கதவை பூட்டிவிட்டு கோவிலியே படுப்பது வழக்கம் அது போல் கோவிலை பூட்டிவிட்டு சாவியை தனது தலைக்கு அருகில் வைத்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கு தெரியாமல் திருடர்கள் சாவியை எடுத்து கோவிலை திறந்து பல கோடி மதிபுள்ள மரகதலிங்கத்தை திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து வழக்கம்போல கோவில் பூசாரி கலியபெருமாள் காலையில் எழுந்து பார்த்தபோது  சாவியை பார்த்த போது சாவியை காணவில்லை மேலும் கோவில் உள்ளே சென்று பார்த்த போது சுவாமி மரகத லிங்கத்தை காணவில்லை இதனையடுத்து கோவிலை சுற்றி என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்களிடம் கூறியுள்ளார். கிராம பொது மக்கள்  ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  இதனையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சக்கரவர்த்தி  தலைமையில் போலிசார் விசாரணை செய்தனர்.பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் சீமாய் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு கொண்டனர். பழமையான கோவிலில் மரகதலிங்கம் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என்றும் அதில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியுள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போல் 2013-ம் ஆண்டு இதே கோவிலில் இதே மரகதலிங்கத்தை திருடி சென்றுள்ளனர். ஆனால் மரகதலிங்கத்தை கொண்டு செல்லும் போது விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் இறந்து விட்டனர். மேலும் சில நாட்கள் கழித்து மரகதலிங்கத்தை திருடி சென்றவர்கள் திரும்ப கொண்டு வந்து கோவிலியே வைத்துவிட்டு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிட தக்கது. மேலும் கிராம மக்கள் கூறும் போது எங்கள் கோவிலின் இருந்த பலகோடி மதிப்பிலான மரகதலிங்கம் மிகவும் சக்திவாய்ந்த சுவாமி என்றும் ஆகையால் கிராமத்தை காக்க வேண்டி எங்கள் ஊர் மரகதலிங்கத்தை விரைந்து கண்டுபிடித்துதருமாறு  காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுகின்றனர். மேலும் தமிழக அரசுக்கு மிகவும் பழையான அதியசியமான பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் அமைந்துள்ள இக்கோவிலை புணரமைத்து  கும்பாபிஷேகம் செய்து பாதுகாப்பு செய்து தரும்படி கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.