10வது மாடியில் இருந்து திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்.. பரிதாபமாக பலியான முதியவர்

 
லிப்ட்

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் லிஃப்ட் பழுதானதால் கீழே இறங்க முடியாமல் முதியவர் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (55). இவரது மனைவி மலர். இருவரும் டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சங்கீதா, சதீஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் கணேசன் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு பத்தாவது பிளாக் பகுதிக்கு செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளார்.  அப்போது ஏழாவது மாடியில் லிப்ட் பழுதாகி நின்றுள்ளது. உடனடியாக வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் மேலே சென்றுள்ளனர். அதற்குள் கணேசன் கீழே இறங்க முயற்சித்த போது கால் இடறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

போலீசார் அவரின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் இருந்ததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் லிப்ட் முறையாக இயங்கவில்லை என்றும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும் அடுக்குமாடி குடியிருப்பை அரசு முறையாக பராமரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.