நாம் தமிழர் கட்சி கேட்ட சின்னங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்களை வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த 2013 ஜனவரி 4.ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 27.ம் தேதி நடைபெற்இடைத்தேர்தலில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், அவரும் டிசம்பர் 14.ம் தேதி உடல் நல்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது் முறையாக இடைத்தேர்தல் பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறுகிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு உழவு செய்யும் விவசாயி மற்றும் புலி சின்னங்களை வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. உழவு செய்யும் விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி விண்ணப்பத்துள்ளது.